வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : செவ்வாய், 26 மார்ச் 2019 (14:32 IST)

சிவாஜி பாட்ட பாடிட்டு; ஒரே எம்.ஜி.ஆர் பாட்டாம்... உலறும் பிரேமலதா!

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்லது. அனைத்து கட்சி தலைவர்களும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி திட்டிக்கொண்டு மக்களிடம் ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். 
அந்த வகையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜய்காந்த், அதிமுக கூட்டணி கட்சிகளின் திருச்சி மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துக்கொண்டார். தேமுதிக அதிமுகவுடன் பெரிய போராட்டத்திற்கு பிறகு கூட்டணி அமைத்திருக்கிறது.
  
அதிமுக கூட்டத்தில் பிரேமலதா பேசியது பின்வருமாறு, கேப்டனுக்கு தற்போது ஸ்பீச் தெரபி அளிக்கப்பட்டு வருகிறது. அப்போது, ஏதாவது பாடலை பாடுமாறு மருத்துவர்கள் கூறுவர். அப்போது, எம்ஜிஆர் பாடலை மட்டுமே அவர் பாடுவார். 
கேப்டன் நடித்த திரைப்படங்களின் நிறைய பாடல்கள் இருந்தாலும், அவர் விரும்பி பாடுவது எம்ஜிஆர் பாடல்களைத்தான். அதிலும் குறிப்பாக 'ஒளிமயமான எதிர்காலம்' என்ற பாடலை அடிக்கடி பாடுவார் என தெரிவித்தார். 
 
பிரேமலதாவின் இந்த பேச்சை கேட்டு அங்கிருந்த பலர் முனுமுனுத்தனர் காரணம், 'ஒளிமயமான எதிர்காலம்' எம்.ஜி.ஆர் பாடல் அல்ல சிவாஜியின் பாடல். சிலரோ விஜயகாந்துக்குதான ஸ்பீச் தெரபி பிரேமலதா ஏன் உலறுராங்க எனவும் நகையாடினர்.