வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: சனி, 13 ஏப்ரல் 2019 (16:31 IST)

அடுத்தடுத்து வீடியோவை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பும் கமல்: இம்முறை என்ன வீடியோ?

மற்ற கட்சிகளை போல் இல்லாமல் வேறு விதமான பிரச்சார யுத்தியை கையாண்டு வரும் கமல், தங்களின் வேட்பாளர்கள் குறித்த வீடியோவை தனது டிவிட்டரில் தொடர்ச்சியாக பகிர்ந்து வருகிறார்.
நேற்று டிவிட்டரில் கமல் தனது தேர்தல் பிரச்சார வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் மிகவும் ஆவேசமாகப் பேசியுள்ள கமல் ‘ யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை நீட் தேர்வு எனும் அநீதியால் உயிரிழந்த அனிதாவின் பெற்றோரிடம் கேட்டு வாக்களியுங்கள்’ எனக் கூறியிருந்தார்.
 
இதைத்தொடர்ந்து தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் நம்ம கட்ற வரிப்பணத்தை வீணாக்கும் அரசு குடிக்க தண்ணி கூட தராம ஏமாத்துறாங்க. மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் உறுதிமொழி. ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீர் வசதி. வாக்களிப்பீர் #டார்ச்லைட் சின்னத்திற்கு. உங்கள் நான் என கூறியுள்ளார்.