இதுதான் எங்கள் சரக்கு.... இதுதான் எங்கள் முறுக்கு... கமல்ஹாசன் பொளேர்!!!
நேர்மை மட்டும் தான் எங்கள் சரக்கு அதுவே எங்கள் முறுக்கு என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
பாராளுமன்ற சட்டமன்ற இடைத்தேர்கலையொட்டி அமைச்சர்கள் மட்டும் கட்சி பிரமுகர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு பரப்புரையில் ஈடுபடும் முக்கிய பிரமுகர்கள், வேட்பாளர்களின் பெயரை மாற்றி சொல்லியும், கட்சியின் சின்னத்தை மாற்றி கூறியும் அக்கப்போர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தங்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர் நேர்மை மட்டுமே எங்களின் சரக்கு அதுவே எங்களின் முறுக்கு என கூறினார். மேலும் விலைபோக தாங்கள் ஒன்றும் ரேஸ் குதிரை அல்ல என்றும் நாங்கள் மனிதர்கள் எனவும் கூறினார்.
கட்டுபோடும் அமைச்சர்களை நம்பாதீர்கள் என அமைச்சர் செயகுமாரை சூசகமாக திட்டினார். மேலும் வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெற கூடாது எனவும் அவர் பேசினார்.