வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : திங்கள், 15 ஏப்ரல் 2019 (13:01 IST)

சொப்பன சுந்தரிய (அதிமுக) யாரு வச்சியிருக்கா...? சர்ச்சையை கிளப்பிய செந்தில்

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றன. 
 
அந்த தினகரனின் அமமுக கட்சியை ஆதரித்து நகைச்சுவை நடிகர் செந்தில் பிரச்சாரம் செய்து வருகிறார். சமீபத்தில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் மரியப்பன் கென்னடியை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். 
 
அப்போது அவர் பேசியதாவது, நான் மறைந்த பிறகும் அதிமுக 100 ஆண்டுகளுக்கு இருக்கும் என ஜெயலலிதா கூறினார். ஆனால், இப்போது அதிமுக யாரிடம் இருக்கு என்றே தெரியவில்லை. 
இதை பார்க்கும் போது நான் நடித்த கரகாட்டக்காரன் படத்தில் ‘காரை வைச்சிருந்த சொப்பன சுந்தரிய இப்ப யாரு வைச்சியிருக்கா...’ என்பது போல அதிமுக இப்போது எடப்பாடி பழனிச்சாமியிடம் உள்ளதா, ஓ.பன்னீர் செல்வத்திடம் உள்ளதா, அல்லது மோடியிடம் உள்ளதா என தெரியவில்லை. 
 
ஜெயலலிதா யாருடன் கூட்டணி வைத்துக்கொள்ளக்கூடாது என இருந்தாரோ, இப்போது அவர்களுடனே அதிமுக கூட்டணி வைத்து துரோகம் செய்துள்ளது. திமுக, அதிமுகவினர் ஓட்டுக்கு காசு கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள். அது உங்கள் வரி பணம்தான். தேர்தலின் போது உங்களிடமே வந்து சேர்கிறது என தெரிவித்துள்ளார். 
 
ஆனால், அதிமுகவை செந்தில் இவ்வாறு மோசமாக விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.