’அந்த’ 2 விளம்பரத்தை ஒளிபரப்ப கூடாது: அதிமுகவுக்கு தேர்தல் அதிகாரி குட்டு!!!

sathya
Last Modified திங்கள், 15 ஏப்ரல் 2019 (12:10 IST)
அதிமுக சார்பில் வெளியிடப்படும் குறிப்பிட்ட தேர்தல் விளம்பரத்தை ஒளிபரப்ப தடை விதித்து தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
 
தேர்தல் நெருங்குவதால் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்தந்த கட்சியின் தலைவர்கள் தங்களின் வேட்பாளரை ஆதரித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதுஒரு புறமிருக்க திமுக, அதிமுக, மநீம கட்சிகள் சமூக வலைதளங்களிலும், டிவிக்களிலும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி தங்கள் கட்சிகளின் விளம்பரத்தை மேற்கொண்டு வருகின்றனர். 
 
அதிலும் குறிப்பாக அதிமுக வேளியிட்ட விளம்பரத்தில் இலங்கை படுகொலை, திமுக நில அபகரிப்பு சம்பவங்கள் குறித்தான வீடியோவை வெளியிட்டது. இது முற்றிலும் ஆதாரமற்றது. இது உச்சநீதிமன்றம் விதித்த தேர்தல் நடைமுறைகளுக்கு எதிரானது என திமுக சட்டப்பிரிவு தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியது.
 
இதையடுத்து குறிப்பிட்ட 2 விளம்பரங்களை எந்த ஒரு சேனலும் வெளியிட கூடாது தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இதனை மீறும் சேனல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :