ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: புதன், 17 ஏப்ரல் 2019 (13:44 IST)

முஸ்லிம்கள் பாஜகவுக்கு ஓட்டுப்போடக்கூடாது – சர்ச்சையில் சிக்கிய சித்து !

காங்கிரஸ் அமைச்சரான சித்து முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்கு அளிக்கக் கூடாது எனக் கூறியதை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் ஜிங் சித்து காங்கிரஸ் கட்சியின் இணைந்து செயல்பட்டு வருகிறார். அவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. வாகவும் உள்ளார். இதனையடுத்து மக்களவைத் தேர்தலுக்காக தனது மாநிலத்தில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

பிஹாரின் கத்தியார் மாவட்டத்தில்  நேற்று சித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முஸ்லிம்கள் உள்ள அந்த பகுதியில் பிரச்சாரத்தின் போது பேசிய சித்து ‘ பாஜக உங்களை மதரீதியாக ஒடுக்குகிறது. இங்கு நீங்கள் 65 சதவீதம் பேர் இருக்கிரீர்கள். ஆகவே நீங்களே பெரும்பாண்மை. நீங்கள் சேர்ந்து வாக்கு அளித்தால் மோடியை விரட்டலாம், ஆகவே பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள்’ எனப் பேசினார்.

மதத்தை முன்னிறுத்தி சித்து பேசியதாக இந்த பேச்சு சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து தேர்தல் அதிகாரியும் மாவட்ட பாஜகவினரும் சித்துவின் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து சித்து மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 123, 125 ஆகிய பிரிவின் கீழும், ஐபிசி பிரிவு 188ன்கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.