தமிழன் தான் பிரதமராக வரணும் - பிரபல நடிகர்
தமிழ்த் திரைப்படத்தில் ஏற்கனவே நடிகரான அறிமுகமான மன்சூர் அலிகான் வரும் நாடாளுமன்ற தேர்தல் மூலமாக அரசியலில் குதிக்கிறார். நாம் தமிழர் கட்சியில் சார்பில் திண்டுக்கல் தொகுதியில் வேட்புமனுதாக்கல் செய்தார் மன்சூர் அலிகான்.
அதன் பின்னார் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :
எனது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஜவ்வாதுபட்டி. நான் வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக நிற்கிறேன்.
தற்போது திண்டுக்கல் மாவட்டம் மோசமான நிலைமையில் உள்ளது. ஆற்று மணலை அள்ளிவிட்டார்கள். சில கிராமங்களில் குடிக்க தண்ணீர் கூட இல்லை. பொன்மாந்துரை கிராமந்தான் இந்தியாவிலேயே தண்ணீர் இல்லாத மாநிலமாக இருக்கிறது என்று பேசியவாறு கண்கலங்கினார்...உடனே இவர்களுக்கு தண்ணீர் ஏற்பாடு செய்தாக வேண்டும் மேலும் அடுத்த பிரதமராக தமிழன் தான் வர வேண்டும் என்று கூறினார்.