1. ப‌ல்சுவை
  2. இலக்கியம்
  3. கட்டுரைகள்
Written By சினோஜ்
Last Updated : வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (19:37 IST)

ஏழைகளைத் துரத்தும் வறுமை…அதை விரட்டும் வழி என்ன?

Poverty
சுதந்திரம் பெற்ற இந்திய நாட்டில் இன்னும் வறுமை மட்டும் தீராப்பிணியாகவே தலைமுறை தலைமுறையாக ஏழைகளை ஆண்டு வருகிறது.
 
ஒரு தொழிலில் ஈடுபடும் ஏழையில் வருமானம் அவனை மட்டும் சார்ந்தது அல்ல. அவன் குடும்பத்தையும், சமூகத்தையும், நாட்டையும் சார்ந்ததுள்ளது. ஆனால், அவன் வறுமானமே பெறாத போதிலும்கூட யாரோ ஒருவர் அவனுக்கு உதவுதல் பொருட்டும் ஒரு பசியைப் போக்குவதற்க்கான ஒரு முனைப்பு செயல்படுத்தப்படுகிறது இங்கு.
 
இந்தியாவில் மட்டு சுமார் 90% அமைப்புசார தொழில்களில் பணியாற்றி வருகின்றனர். தினக்கூலிகளாக பணியாற்றும் இவர்களுக்கு மாதம் சிறு தொகையைச் சேமித்து, எதிர்காலத்தில் பலனளிக்கும் வகையில் கடந்த 2008 ஆம் ஆண்டு மத்திய அரசு ஒரு ஓய்வூதியத்திட்டம் கொண்டு வந்தது. இதன் மூலம் பலர் பயன் பெற்று வருகின்றனர்.
 
இப்படி அமைப்புசாரா தொழிலாளர்கள் சேமிக்கும் தொகைக்கு வரிவிலக்கு பலன் களுமுண்டு.
 
ஆனால்,இந்தக் அதிபயங்கர கொரோனா தொற்றுக்காலத்தில் வேலை கிடைப்பததே பெரிய சுமையாய்ப் போனதில் அன்றன்று கிடைக்கும் வருமானத்தில் அன்றையாக செலவுக்கே போதுமானதாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் மாதம் தோறும் சேமிப்பது என்பது ஒரு கேள்விக்குறியதானது.
 
இதொருபுறமிருக்க, ஏற்கனவே சேமிப்புப் பழக்கம் புழக்கத்தில் இருந்த வீடுகளில் மட்டும் இந்தக் கொரொனா ஊரடங்கு காலத்தில் நிசப்தமாக ஒரு பெறும் கடன் சுமையின்றி வீட்டில் வெறுமனே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கும் நாட்களிலும் பசி எனும் அரக்கனை அவர்களால் துரத்தியடிக்க முடிந்திருக்கும்.
 
இந்த நிலையில், இந்தியாவில் 97% அதிகமான மக்கள் ஏழைகளாக மாறியுள்ளதாகவும், இந்தக் கொரொனா தொற்றுக்காலத்தில் மட்டு நடுத்தர வர்க்கம் 32 மில்லியனாகக் குறைந்திருப்பதாகவும் ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
 
இந்தப் பெருந்தொற்றுக் காலம் இதுவரையிலான மனிதகுல வரலாற்றில் ஒரு பெரும் மாற்றத்தையும் வாழ்வாதார இழப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இது இந்தியர்களின் உணவு உட்கொள்ளுதலைப் பாதித்துள்ளதாகவு கூறியுள்ளது.
 
நாட்டிலுள்ள முதன் நிலலைப் பெரும் பணக்காரர்களின் சொத்துக்கள் எல்லாம் எவரெஸ்ட் சிகரத்தைப் போன்று உயர்த்துகொண்டே போகிறது. ஏழைகள் எல்லோரும் மேலும் ஏழைகளாகவே மாறும் இந்தப் போக்கை எப்படி மாற்றுவது என்பது பற்றி ஆராய்ச்சி மாணவர்களும், இளைஞர்களும், ஆட்சியாளர்களும் சிந்திக்க வேண்டும்.
 
சமீபத்தில், தன் தந்தை விபத்தில் சிக்கி வேலைக்குச் செல்ல முடியாத நிலையில்,குடும்பச் சூழலைக் கருத்தில்கொண்டு, அவரது 7 வயது மகன் ஒரு தனியார் உணவு டெலிவரி பெயரில், சைக்கிள் மூலமாகச் சென்று வாடிக்கையாளருக்கு வி நியோகித்திருக்கிறான். இது நாட்டில் அதிகம் பேசு பொருளாகியுள்ளது. ஆனால், ஏழை மக்களுக்கு பல திட்டங்களையும் சலுகைகளை அரசு அறிவித்தாலும் உரிய விதத்தில், அவர்களை அது சென்றடைகிறதா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
 
இப்படி ,விபத்தில் உடம்பிற்கு முடியாமல் போன ஒரு தொழிலாளியின் குடும்பம் எத்தனை இன்னல் படும்? ஒருவேலை அவர் தவறினால் அந்தக் குடுபத்தின் நிலை என்ன?, தன் குடும்பத்திற்காக குடும்பத்தலைவனுக்குப் பதில் வேலைக்குச் செல்ல நேர்கிற குழந்தைகளைக் கருத்தில் கொண்டு இன்னும் பல எதிர்காலத் திட்டங்கள் தீட்டப்படுமானால், அது பல மாணவர்களின் பள்ளிக்கனவைப் பாதிக்காது. அப்படித் தீட்டப்படும் திட்டங்கள் எல்லாம் நாட்டின் எதிர்காலத் தூண்களை பிஞ்சில் இருந்தே வலுப்படுத்தும்.