மாறனாக விஷ்ணு விஷால்... "காடன்" செகண்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!

Written By papiksha
Updated: செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (11:39 IST)
தொடரி படத்தின் இயக்குனர் பிரபு சாலமன் அடுத்ததாக நடிகர் ராணா டக்குபதியை வைத்து காடன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 
 
சாந்தனு மொய்த்ரா இசையமைத்துள்ள இப்படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு  இந்தியா மற்றும் தாய்லாந்து காடுகளில் நடைபெற்றது. தமிழ்,  தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமான உருவாகியிருக்கும் இப்படம் ஒரு யானை பாகனின் வாழ்வை மையமாக கொண்டு உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. 
 
படத்தின் நாயகன் ராணா டக்குபதி தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் செகண்ட்  லுக் போஸ்டரை வெளியிட்டதுடன் வருகிற ஏப்ரல் 2-ம் தேதி 3 மொழிகளில் வெளியாகவிருப்பதை உறுதி செய்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்துள்ளது. 
 

எல்லாம் காட்டு

வலிமை ஏன் மிஸ் ஆச்சி?!.. மனம் திறக்கும் ஹெச்.வினோத்!..

ஜெயிலர் படத்துக்கு U/A!. ஜனநாயகனுக்கு A சர்ட்டிபிகேட்!. ஹெச்.வினோத் ஃபீலிங்...

1000 கோடி சொத்து இருக்கும்.. ஆனா மக்கள் கருணை காட்டுவாங்க!.. ஹெச்.வினோத் ஓப்பன்

2வது நாளிலேயே 100 கோடி வசூலை தாண்டிய ஜனநாயகன்!.. விஜய்னா மாஸ்தான்!..

இந்தியாவில் 100 கோடி வசூலை அள்ளிய The Odyssey!.. உலகம் முழுவதும் வசூல் என்ன?..

அடுத்த கட்டுரையில்
Show comments