ஸ்டைலிஷ் இயக்குநரை பின்னுக்கு தள்ளிய இளம் இயக்குநர்
ஸ்டைலிஷ் இயக்குநருக்குப் பிறகு படத்தைத் தொடங்கிய இளம் இயக்குநர், முக்கால்வாசி படப்பிடிப்பை முடித்துவிட்டாராம்.
ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போதே, இன்னொரு படத்தையும் இயக்கும் வேலையை சமீப காலமாகச் செய்து வருகிறார் ஸ்டைலிஷ் இயக்குநர். வம்பு நடிகரை வைத்து ஒரு படத்தை இயக்கும்போதே, ஒல்லி நடிகரையும் வைத்து ஒரு படத்தை ஆரம்பித்தார். தற்போது ஒல்லியின் படத்தை முடிக்கும் முன்பே, உடலை ஏற்றி, இறக்கும் நடிகரை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தின் ஷூட்டிங், கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. வம்பு நடிகரை வைத்துப் படமெடுத்த இளம் இயக்குநர், தற்போது உடலை ஏற்றி, இறக்கும் நடிகரை வைத்துப் படமெடுத்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங், கடந்த பிப்ரவரியில்தான் தொடங்கியது. ஆனால், அதற்குள் 85 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டாராம் இளம் இயக்குநர். ஆனால், அதற்கு முன்பே ஷூட்டிங்கை தொடங்கிய ஸ்டைலிஷ் இயக்குநர், இன்னும் பாதி படத்தைக்கூட முடிக்கவில்லையாம்.