அட்லி மீது கடும் கோபத்தில் ஏஜிஎஸ்? ஏஜிஎஸ் மீது கடுங்கோபத்தில் விஜய்?
தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி 3 நாட்களில் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை புரிந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது
இந்த நிலையில் படத்தின் இயக்குனர் அட்லி மீது அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ் கோபத்தில் இருப்பதாகவும் அதே போல் ஏஜிஎஸ் நிறுவனம் மீது விஜய் கோபத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
பிகில் திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே இந்த படத்தின் நீளம் 3 மணி நேரம் என்பது அதிகம் என்று ஏஜிஎஸ் நிறுவனம் கருத்து தெரிவித்ததாகவும் ஆனால் படத்தின் நீளத்தை குறைக்க அட்லி சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது
தற்போது விமர்சனங்கள் உள்பட அனைவரும் கூறும் ஒரே முக்கிய குறை என்னவெனில் படத்தின் நீளம் தான். குறிப்பாக முதல் பாதியில் தேவையில்லாத காட்சிகள் அதிகம் இருப்பதால் படம் சலிப்படைய செய்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கடும் கோபத்தை வரவழைத்து உள்ளது
அதேபோல் பிகில் திரைப்படத்தை தமிழகத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் சொந்தமாக ரிலீஸ் செய்ய வேண்டும் என்று விஜய் கேட்டுக்கொண்டதாகவும் அதற்கு ஏஜிஎஸ் நிறுவனம் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது
ஆனால் கடைசி நேரத்தில் வேறொரு நிறுவனத்திற்கு ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை விற்றுவிட்டதாகவும் அந்த நிறுவனம் பல வினியோகஸ்தர்களுக்கு பிரித்துக் கொடுத்தால் கடைசிநேர கொடுக்கல் வாங்கல் ரிலிஸ் ஒரு சில மணி நேரம் தாமதமானதால் ஏஜிஎஸ் நிறுவனம் மீது விஜய் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது