Daily Horoscope
✕

கதைத் திருட்டில் சிவ நடிகர் படம்… கண்டு கொள்ளாத சங்கங்கள்

Written By cauveri manickam
Updated: திங்கள், 4 செப்டம்பர் 2017 (17:58 IST)
சிவ நடிகர் நடிப்பில் விரைவில் ரிலீஸாக உள்ள படம், கதைத் திருட்டுப் புகாரில் சிக்கியுள்ளது.



 
சிவ நடிகரும், பெரிய நம்பர் நடிகையும் நடித்துள்ள படத்தை இயக்கியுள்ளார், ரீமேக் படங்களுக்குப் புகழ்பெற்ற அந்த இயக்குநர். பிரபல எடிட்டரின் மூத்த மகனான இவர் சொந்தமாகக் கதை எழுதி தம்பியை வைத்து இயக்கிய படம் சூப்பர் ஹிட். எனவே, அவர் இயக்கத்தில் நடிக்க ஓகே சொன்னார் சிவ நடிகர்.

படமும் இன்னும் இரண்டு வாரங்களில் ரிலீஸ் ஆகப் போகிறது. படத்தின் போஸ்டர்களைப் பார்த்த ஒரு உதவி இயக்குநருக்கு, பயங்கர அதிர்ச்சி. காரணம், அவர் தயார் செய்து வைத்திருந்த கதை அது. தோல்விப்படம் கொடுத்த ஒரு இயக்குநரிடம் அந்தக் கதையை இவர் சொல்லியிருக்கிறார். அந்த இயக்குநர்தான் இந்தப் படத்தின் அசோஸியேட் இயக்குநர். உதவி இயக்குநரின் கதையைச் சுட்டு இவர்கள் படத்தை எடுத்துவிட்டார்கள்.

உதவி இயக்குநர் எல்லா சங்கங்களிலும் புகார் கொடுத்துவிட்டார். அரசாங்கம் மட்டுமல்ல, சங்கங்களும் எளியவர்களின் குரலையே கேட்கப் போகிறது? கிணற்றில் போட்ட கல்லாக சத்தமின்றி கிடக்கிறது இவர் புகார். இந்த விஷால் எங்கப்பா போனாரு..?

எல்லாம் காட்டு

பிரேமலு ஹீரோவை வச்சி படமெடுக்கும் சூர்யா.. விரைவில் அறிவிப்பு...

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்த வெப்தொடர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எந்த ஓடிடியில்?

ரஜினி படம்.. அஜித் படம்... நம்ம படத்த என்ன பண்றது?.. குழப்பத்தில் தனுஷ்!...

விஜய் - அஜித்தின் சாதனையை முறியடித்த சூர்யா - ஜோதிகா

அப்பாவுக்கு நிறைய வேலை இருக்கு!. அவரை யூஸ் பண்ணமாட்டேன்!.. ஜேசன் சஞ்சய் பேட்டி!...

அடுத்த கட்டுரையில்
Show comments