வியாழன், 28 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By papiksha
Last Updated : புதன், 11 டிசம்பர் 2019 (13:08 IST)

ஸ்கூல் படிக்கும்போதே அந்த கெட்ட பழக்கம் இருந்துச்சு - வெட்கத்தை விட்டு கூறிய நிவேதா பெத்துராஜ்!

'ஒரு நாள் கூத்து' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ்நாட்டில் பிறந்து துபாயில் வளர்ந்தவர்.
 
தமிழில் பொதுவாக என் மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’ போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.  தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கில்  சித்ரலகரி , புரோசேவரெவருரா போன்ற படங்களில் நடித்து டோலிவுட்டில் பேமஸ் ஆனார். மேலும் தற்போது ஹாலிவுட்டில் நடிக்கும் கனவுடன் சுற்றி வருகிறார் நிவேதா பெத்துராஜ். 
 
இதற்கிடையில்  ரசிகர்களுடன் அடிக்கடி லைவ் சாட்டில் வரும் நிவேதா பெத்துராஜிடம் அவரது ரசிகர்கள் சிறுவயதில் ஏற்பட்ட மறக்க முடியாத நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று கேட்டனர்.அதற்கு பதிலளித்த நிவேதா, இதை நான் வெட்கத்தை விட்டு சொல்லுறேன், சிறுவயதில் எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. ஸ்கூலில் இருந்து சாக் பீஸ் திருடி வந்து அதை என் அம்மாவிடம் கொடுத்து கோலம் போட சொல்லுவேன். மேலும் சின்ன வயசுல வீட்டில் பவர் கட் ஆகிவிட்டால் டார்ச் லைட் அடித்து அக்கம் பக்கத்தில் இருக்கும் குழந்தைகளை பயமுறுத்துவேன் என கூறி சிரித்தார். 
 
இதனை கேட்ட ரசிகர்கள்.. ஓஹோ இது தான் உங்களுக்கு கெட்ட பழக்கமா..? நாங்க என்னமோ ஏதோன்னு பயந்திட்டோம்.. என கிண்டலாக கூறி ரொம்ப நல்ல பொண்ணுமா நீ என கூறினர்.