அக்காவுக்குப் போட்டியாக களமிறங்கும் தங்கை!!
அக்கா நடிகைக்குப் போட்டியாகக் களமிறங்குகிறார் தங்கை.
அம்மா இல்லாத மார்க்கெட் நடிகை, சித்தியின் அரவணைப்பில் தான் வளர்ந்தார். அவரை நடிகையாக்கியது கூட சித்தி தான். ஆனால், ஒருகட்டத்தில் சித்திக்கும், மார்க்கெட் நடிகைக்கும் பிரச்னை ஏற்பட, இருவரும் தனித்தனியாகப் பிரிந்தனர்.
இந்நிலையில், மார்க்கெட் நடிகைக்குப் போட்டியாக தன் மகளை களமிறக்குகிறார் சித்தி. தற்போது ஒரு தெலுங்குப் படத்தில் நடித்துவரும் தங்கையை, விரைவில் தமிழில் நடிக்க வைப்பது என்ற முடிவுடன் இருக்கிறார் சித்தி. அதற்கேற்றபடி புதிதாக போட்டோஷூட் ஒன்றையும் நடத்தி முடித்திருக்கிறார்.