1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Papiksha
Last Updated : செவ்வாய், 8 அக்டோபர் 2019 (11:30 IST)

இதற்கு தான் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதேயில்லை - மனம் திறந்த ஸ்டார் நடிகை

கோலிவுட்டின் உச்ச நடிகையான அந்த மூன்றெழுத்து நடிகை பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தொடர் வெற்றிகளை குவித்து ஸ்டார் நடிகையாக வலம் வருகிறார். ஆனால், இவர் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டாமல் இருந்து வருகிறார். 


 
தற்போது தமிழ் சினிமாவில் மாஸ் நடிகருடன் நடித்து வருகிறார். அண்மையில் அவர் நடிப்பில் வெளியான டோலிவுட் படமொன்று நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார், தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் என பல பிரபலங்கள் சேர்ந்து நடித்திருந்த இந்த படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 
 
அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட அந்த நடிகை பங்கேற்கவில்லை. இந்நிலையில் ரசிகர்கள் பலரும் நடிகை பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மறுத்து வருகிறார் என தொடர்ந்து கேள்வி கேட்டு வந்த நிலையில் தற்போது முதன் முறையாக மனம் திறந்துள்ளார் ஸ்டார் நடிகை, "நான் என்ன நினைக்கிறேன் என்பதை இந்த உலகம் தெரிந்துகொள்ள வேண்டாம் என நினைக்கிறேன். நான் தனிமையை விரும்பும் ஒருவர். கூட்டம் என்றால் எனக்கு சமாளிப்பது கடினம். பல சமயங்களில் நான் பேசியதை தவறாக மாற்றி சித்தரித்துவிடுகிறார்கள். அதனால் வரும் சிக்கல்களை சமாளிப்பது கடினமாக உள்ளது. என்னுடைய வேலை நடிப்பது மட்டும் தான். மற்றதை என் படங்களே பேசும், என்று அவ்வளவு துணிச்சலாக பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார் அந்த மூன்றெழுத்து நடிகை.