செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By CM
Last Updated : செவ்வாய், 9 ஜனவரி 2018 (13:47 IST)

ஒரு படம் கூட ஓடல... பட்டம் ஒரு கேடா..?

‘ஒரு படத்தைத் தவிர உருப்படியா வேறெந்த படமும் ஓடல. இந்த நேரத்துல பட்டம் ஒரு கேடா..?’ என வாரிசு நடிகரைத் திட்டி வருகிறார்கள். ‘நடிகர் திலகம்’ என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரரின் பேரன் இவர். இவருடைய அப்பாவும் வெள்ளி விழா படங்களைக் கொடுத்தவர். ஆனாலும், வாரிசு நடிகருக்கு சுட்டுப் போட்டாலும் நடிக்க வரவில்லை.
 
இவர் நடித்த முதல் படம், திரைக்கதையால் வெற்றி பெற்றது. அதன்பிறகு இவர் நடிப்பில் 9 படங்கள் ரிலீஸாகி விட்டன. ஆனால், ஒன்றுகூட தேறவில்லை. இந்நிலையில், தன்னுடைய அடுத்த படத்தில் ‘வீரத் திலகம்’ என்ற பட்டத்தை போட்டுக் கொண்டுள்ளார் நடிகர்.
 
இதைப் பார்த்து மற்றவர்கள் கடுப்பாகியுள்ளனர். ‘ஒரு படத்தைத் தவிர உருப்படியா வேறெந்த படமும் ஓடல. இந்த நேரத்துல பட்டம் ஒரு கேடா..?’ என வாரிசு நடிகரைத் திட்டி வருகிறார்கள்.