Daily Horoscope
✕

சீதையாக நடிக்கும் நம்பர் நடிகை?

Written By Cauveri Manickam
Updated: திங்கள், 15 மே 2017 (14:51 IST)
மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் ‘ராமாயணம்’ படத்தில், பெரிய நம்பர் நடிகை சீதையாக நடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது  என்கிறார்கள்.

 
500 கோடி ரூபாய் பட்ஜெட்டில், ‘ராமாயணம்’ படத்தை 3 பாகங்களாக தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார் அல்லு அரவிந்த்.  தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் இந்தப் படம் உருவாக இருக்கிறது. அல்லு அரவிந்தின் மகன் அல்லு அர்ஜுன்  ராமனாக நடிக்கலாம் என்கிறார்கள்.
 
இந்நிலையில், சீதையாக யார் நடிப்பது என்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பெரும்பாலானவர்கள், பெரிய நம்பர்  நடிகையைத்தான் பரிந்துரைக்கிறார்களாம். காரணம், ஏற்கெனவே ஒரு படத்தில் சீதையாக நடித்துள்ளார் அவர். எனவே,  சீதையைப் பற்றி அவருக்கு நன்கு தெரியும். அதனால், கதையை எளிதாக உள்வாங்கி நடித்து விடுவார். அத்துடன், ஷூட்டிங்  நடைபெற்றபோது, விரதம் இருந்து நடித்தார். எனவே, சீதையின் கதாபாத்திரத்திற்கு பெரிய நம்பர் நடிகைதான் 100%  பொருத்தமானவர் என்கிறார்களாம்.

எல்லாம் காட்டு

பரபர ஆக்சன்.. ஹாலிவுட் ஸ்டைலில் டிரெய்ன்!.. டிரெய்லர் வீடியோ வேறலெவல்...

கர்நாடக மாநில சிருங்கேரி சாரதா பீடம் கோயிலுக்கு சென்ற த்ரிஷா.. அரசியலில் குதிப்பதற்கு முன் வழிபாடா?

கைதி பட வாய்ப்பை தவறவிட்ட விஜய் சேதுபதி

4வது முறையாக அம்பிகாபதி இயக்குனரோடு இணையும் தனுஷ்.. புது பட அப்டேட்..

ஆர்த்தி தொடர்ந்த வழக்கு!.. கெனிஷா நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments