ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By sivalingam
Last Modified: புதன், 13 செப்டம்பர் 2017 (06:44 IST)

கிராமம், நகரம், சர்வதேசம் அடுத்தது விண்வெளியா? அஜித்தின் பலே திட்டம்

அஜித்-சிவா கூட்டணியில் 'வீரம்' கிராமத்து படமாகவும், 'வேதாளம்' நகரப்படமாகவும், 'விவேகம்' சர்வதேச உளவாளி படமாகவும் இருந்த நிலையில் இந்த கூட்டணியின் அடுத்த படம் விண்வெளி என்று கூறப்படுகிறது.



 
 
அஜித்-சிவா கூட்டணி மீண்டும் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் கதை குறித்த செய்தி ஒன்று இணையதளங்களில் உலா வருகிறது.
 
இந்த படம் விண்வெளி சம்பந்தப்பட்ட கதை என்றும், 'விவேகம்' படத்தை விட இரண்டு மடங்கு இந்த படத்தின் பட்ஜெட் ஆகும் என்றும், இந்த படத்தின் தயாரிப்பாளர் அனேகமாக வெளிநாட்டு தமிழ் நிறுவனமாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது.