வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 அக்டோபர் 2020 (13:24 IST)

வாட்ஸப் மெசேஸ் அலப்பரை தாங்க முடியலயா? – உங்களுக்காகதான் இந்த அப்டேட்!

வாட்ஸ்அப்பில் தனிநபர் மெசேஜ் மற்றும் குழு மெசேஜ்கள் அதிகமாக வருவதால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க வாட்ஸப் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்அப் செயலி வந்தது முதல் ஒருவரோடு ஒருவர் செய்திகளை பறிமாறி கொள்வது மட்டுமல்லாமல். புகைப்படங்கள், வீடியோக்கள், டிஜிட்டல் கோப்புகள் போன்றவற்றையும் எளிதாக பறிமாறி கொள்ள முடிகிறது. அதேசமயம் வாட்ஸப் குழு வசதியால் வேலை பார்க்கும் இடம், படித்த பள்ளி, சொந்தகாரர்கள், நண்பர்கள் என ஒவ்வொருவருக்கும் ஏராளமான குழுக்கள் தொடங்கி விடுவதால் நாளொன்றுக்கு ஏகப்பட்ட மெசேஜ்கள் வந்து குவிந்து விடுகின்றன. இதனால் நோட்டிபிகேசன் பகுதி முழுவதும் வாட்ஸப் செய்திகளால் நிரம்பி விடுகிறது.

வாட்ஸப்பில் குறிப்பிட்ட நபர் அல்லது குழுவின் நோட்டிபிகேசன்களை ம்யூட் செய்து வைக்க ஆப்சன் உண்டு என்றாலும் அதிகபட்சமாக ஒரு ஆண்டு வரையே அதில் ம்யூட் செய்து வைக்க முடியும். இந்நிலையில் வாட்ஸப் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி தேவையற்ற நபர் மற்றும் குழுக்களின் நோட்டிபிகேசன்களை ஆயுள் முழுவதும் ம்யூட் செய்து வைத்துக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. தேவையானபோது ம்யூட்டை நீக்கி கொள்ளவும் முடியும்.