புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 6 அக்டோபர் 2022 (15:34 IST)

வியு ஒன்ஸில் அனுப்பினால் டவுன்லோட் செய்ய முடியாது… வாட்ஸ் ஆப்பில் புதிய வசதி

வாட்ஸ் ஆப் செயலியில் ஒரு புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

வாட்ஸ் ஆப் செயலி கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. இதுபோல அடிக்கடி தங்கள் செயலியில் பல புதிய வசதிகளை இணைத்து வருகிறது. அந்த வகையில் இப்போது வாட்ஸ் ஆப் காலண்டர் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட தேதியில் நடந்த உரையாடல்களை நாம் உடனடியாக தேடி எடுக்க வசதியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. விரைவில் இந்த வசதி வாட்ஸ் ஆப் அப்கிரேடட் வெர்ஷனில் வர உள்ளது.

இதே போல இப்போது வாட்ஸ் ஆப்பில் வியு ஒன்ஸ் என்ற ஆப்ஷனைக் கொண்டு வர உள்ளது. இதன் மூலம் அனுப்பப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டவுன்லோட் செய்யவோ அல்லது ஸ்க்ரீன்ஷாட் எடுக்கவோ முடியாது. இதன் மூலம் பயனர்கள் பாதுகாப்பான பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம் என தெரிகிறது.
Edited by Vinoth