திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 27 ஜூலை 2019 (13:42 IST)

இன்று முதல் விவோ ஒய் 90 – பட்ஜெட் சந்தையை நோக்கி விவோ !

விவோ நிறுவனம் தங்களது பட்ஜெட் மொபைல் போனான ஒய் 90 –ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

விவோ நிறுவனம் தங்களது அதிநவீன ஸ்மார்ட்போன்களால் ஸ்மார்ட் போன் சந்தையில் குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால் அவையெல்லாம் விலையுயர்ந்த செல்போன்களாக உள்ளன. இதனால் பட்ஜெட்டில் போன் வாங்கும் மக்கள் ரெட்மி, சாம்சங் போன்ற மொபைல் போன்களையே அதிகமாக வாங்குகின்றனர்.

இதனால் விவோ ஒய் 90 ஸ்மார்ட்போனைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.6,990 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6.22 HD+ தொடுதிரை பொருத்தப்பட்டுள்ள இந்த போன் கட்டமைப்பு  பிளாஸ்டிக்கை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சமாக 4030mAh திறன் கொண்ட சக்திவாய்ந்த பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.  பின்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமராவும், முன்புறத்தில் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மாடல் போன்கள் இன்றுமுதல் இந்தியா முழுவதும் விற்பனைக்குக் கிடைக்கின்றன.