திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 29 நவம்பர் 2023 (16:06 IST)

சூப்பர் டூப்பர் சிறப்பம்சங்களுடன் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்! – Redmi 13C விரைவில்..!

Redmi 13 C
ஷாவ்மி நிறுவனத்தின் புதிய Redmi 13C 5G ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில், பல சிறப்பம்சங்களுடன் இந்தியாவில் வெளியாக உள்ளது.



இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் விரிவடைந்துள்ள நிலையில் பட்ஜெட் ப்ரெண்ட்லி 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு வரவேற்பு சிறப்பாக இருந்து வருகிறது. இதனால் பல முன்னணி நிறுவனங்களும் பட்ஜெட் விலையிலான 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் டிசம்பர் 6 அன்று வெளியாக உள்ள Redmi 13C ஸ்மார்ட்போனும் கவனம் பெற்றுள்ளது.

Redmi 13C ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
 
  • 6.74 இன்ச் ஹெச்டி+ டிஸ்ப்ளே
  • மீடியாடெக் ஹெலியோ ஜி85 சிப்செட்
  • மாலி ஜி52 ஜிபியு
  • 4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
  • 128 ஜிபி / 256 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • ஆண்ட்ராய்டு 13, MIUI 14
  • 50 எம்பி + 2 எம்பி ப்ரைமரி டூவல் கேமரா
  • 8 எம்பி முன்பக்க செல்ஃபி கேமரா
  • சைட் கைரேகை சென்சார், AI Face Lock,
  • 5000 mAh பேட்டரி, 18 W பாஸ்ட் சார்ஜிங்

இந்த Redmi 13C ஸ்மார்ட்போன் மிட்நைட் ப்ளாக், நேவி ப்ளூ, க்ளாசியர் வொயிட் மற்றும் க்ளோவர் க்ரீன் ஆகிய நான்கு வண்ணங்களில் வெளியாகிறது. இதன் ஆரம்ப கட்ட வேரியண்டின் விலை ரூ.12,000-ல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K