திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 ஜனவரி 2025 (08:36 IST)

இனி சப்டைட்டில் தேடி அலையத் தேவையில்லை! VLC கொடுத்த புது AI அப்டேட்!

VLC

PC பயனர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் VLC Media Player தற்போது சப்டைட்டில் பிரச்சினைக்கு AI உதவியுடன் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 

உலகம் முழுவதும் கணினி மற்றும் ஸ்மார்ட்போன் பயனாளர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் மீடியா ப்ளேயர் அப்ளிகேஷன்களில் ஒன்றாக VLC ஒன்றாக உள்ளது. பலவகைப்பட்ட வீடியோ Foramtகளும் இதில் ப்ளே செய்ய முடியும் என்பதால் பலரும் படங்கள் பார்ப்பதற்கு VLCஐ பயன்படுத்துகின்றனர். அவ்வாறாக படம் பார்க்கும்போது அதில் சப்டைட்டில் இல்லை என்றால் VLC Sub வசதியை பயன்படுத்தி இணையத்தில் இருந்து சப்டைட்டில் நேரடியாக டவுன்லோடு செய்து பார்க்கலாம்.

 

இந்நிலையில் தற்போது VLC சப்டைட்டில் பிரச்சினைகளை சரிசெய்ய புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பார்க்கும் படங்களுக்கான சப்டைட்டிலை VLC ப்ளேயரே ஏஐ உதவியுடன் காட்டுகிறது. மேலும் இந்த சப்டைட்டில்கள் ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் 100க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் உள்ளீடு செய்யப்படுவதால், எந்த மொழியினரும் சிரமமின்றி படங்களை பார்க்கலாம் என கூறப்படுகிறது. விஎல்சியின் இந்த வசதியை இணையவாசிகள் பலரும் வரவேற்றுள்ளனர்.

 

Edit by Prasanth.K