புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 14 டிசம்பர் 2018 (13:25 IST)

அடிச்சு தூக்கு ...ஜியோவுக்கு போட்டியான வொடபோன்! ரூ.169 பிளான்..

கடந்த வருடம் ஜியோ கொடுத்த அளவில்லாத ஆஃபர்களால் குறுகிய காலத்திலேயே இந்தியாவில் நெம்பர் ஒன் நெட்வொர்க்காக உயர்ந்தது.இதனால் மற்ற முன்னணி தொலை தொடர்பு சேவை நிறுனமான ஏர்டெல், வோடபோன் , டாடா டொகோமொ போன்றவை ஜியோவுடனான போட்டியை சமாளிக்க முடியாமல் திணறிப்போயின.
இந்நிலையில் தன் பயனாளர்களை தக்க வைக்க வேண்டி பல சேவைகளை ஆப்பர்கள் வழங்கின. ஆனாலும் ஜியோவின்  இடத்தை பிடிக்க முடியவில்லை. 
 
இந்நிலையில் ஜியோவின் 149 பிளேனுக்கு போட்டியாக வோடபோன் நிறுவனம் பல புதிய திட்டங்களை  வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
 
அளவில்லாத உள்ளூர் மற்றும் தேசிய கால்கள் இலவச ரோமிங் 1ஜிபி  3ஜி \4ஜி டேட்டா தினமுன் வழங்குதாகவும் அத்துடன் தினமும் 100 எஸ் எம் எஸ் அனுப்பலாம் எனவும் அறிவித்துள்ளது.
 
இதில் முக்கியமானது என்னவென்றால் ஜியோவின் ரூ149 திட்டத்தை விட அதிக சிறப்பம்சம் கொண்டது வொடபோனின் ரூ169 திட்டமாகும்.
 
மேலும் வொடபோனில் தினமும் 250 கால்களூம் வாரத்திற்கு 1000 கால்களும், ஒருமுறை கால் ரீச்சானவுடன் 1.2பைசா ஒரு செகண்டுக்கு போகும் இல்லையென்றால் நிமிடத்துக்கு 1 ரூபாய் போகும்.இதுதான் கடைசி கட்ட விலையாகும்.
 
சமீபத்தில் வொடபோன் ஆறு ரீசார்ஜ் நிலைகளை பயனாளர்களூக்கு வழங்கியுள்ளது.அதில் ரூ. 199, ரு25,ரூ35,ரூ 65,ரூ95, ரூ145, ரூ 245 ஆகும்.