Daily Horoscope
✕

இன்று முதல் இந்தியாவில் 5ஜி சேவை! – 4 நகரங்களில் தொடக்கம்!

Written By Prasanth Karthick
Updated: புதன், 5 அக்டோபர் 2022 (10:10 IST)
இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்க பல நிறுவனங்களும் நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில் இன்று முதல் 4 நகரங்களில் 5ஜி சேவை தொடங்க உள்ளது.

இந்தியாவில் 5ஜி சேவைக்கான ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் 5ஜி சேவையை தொடங்க முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை உரிமத்தை ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா, அதானி நெட்வொர்க் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏலத்தில் எடுத்துள்ளன.

இந்நிலையில் இன்று தசரா கொண்டாடப்படும் நிலையில் இந்தியாவின் 4 நகரங்களில் சோதனை அடிப்படையிலான 5ஜி சேவையை தொடங்குவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் சோதனை அடிப்படையிலான 5ஜி பீட்டா சேவைகள் தொடங்கப்படுகின்றன. 1GBPS வேகத்தில் வழங்கப்படும் இந்த சேவைக்கு தற்போது 5ஜி சிம்கார்டுகள் தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

Edited By: Prasanth.K

எல்லாம் காட்டு

பினராயி விஜயன் மற்றும் மகள், மருமகன் மீது வழக்கு தொடர அனுமதி.. கேரள ஐகோர்ட் உத்தரவு..

மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரியில் பாஜக வெற்றி முகம்.. தமிழகத்தில் தவெக தான்..

இடைத்தேர்தல் வாக்குபதிவு!.. 6வது சுற்றில் எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு?.. வாங்க பார்ப்போம்!..

தாராபுரத்தில் மீண்டும் தவெக முன்னிலை.. 2வது இடத்திற்கு மீண்டும் வந்த அதிமுக...

தாராபுரத்தில் நான், மதுராந்தகத்தில் நீ.. அதிமுக, திமுக செட்டிங்ஸ் வொர்க் அவுட் ஆனதா?

அடுத்த கட்டுரையில்
Show comments