வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (09:31 IST)

என்னைய்யா எங்களை காப்பி அடிச்சிருக்கீங்க! - சிஎஸ்கே போல விளையாடிய மும்பை இந்தியன்ஸ்

நேற்றைய ஐபிஎல் போட்டியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முன்னதாக சிஎஸ்கே வெற்றிபெற்ற அதே வகையில் வெற்றி பெற்ற சம்பவம் வைரலாகியுள்ளது.

நேற்றைய ஐபிஎல் போட்டியில் முதலாவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் பெற்ற நிலையில் அடுத்ததாக களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 18.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் இதற்கு முன்னதாக நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஆட்டத்தில் சிஎஸ்கேவும் 18.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து வெற்றியை கைப்பற்றியது. இரு வெவ்வேறு ஆட்டங்களில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஒரே போல ஓவர், விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது இரு அணிகளும் ஊசிக்கு ஊசி போல சரிசமமாக நிற்பதை உணர்த்துவதாய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.