திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (21:44 IST)

ஐபிஎல்-2023: குஜராத் அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்கு

delhi gujarath
இன்றைய போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி மோதி வருகிறது.

இன்றைய போட்டி, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

எனவே முதலில்  பேட்டிங் செய்த டெல்லி அணியில், டேவிட் வார்னர் 37 ரன்களும், ஷா 7 ரன்னும்,சர்பாஷ் கான் 30 ரன்களும், போரல் 20 ரன்களும், படேல் 36 ரன்களும் அடித்தனர்.

எனவே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில், டெல்லி அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து, குஜராத் அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

குஜராத் அணியில், ஷமி, கான் தலா  3 விக்கெட்டுகளும்,  ஜோசப் 2 விக்கெட் கைப்பற்றினர்.

வெற்றி, இலக்கை நோக்கி, களமிறங்கிய குஜராத் அணியில், தொடக்க வீரர்களாக சாஹாவும்(14 ரன்கள்) கில்லும்(8 ரன்) இறங்கியுள்ளனர்.

தற்போது 18 ரன்களுடம் குஜராத் அணி விளையாடி வருகிறது.