Daily Horoscope
✕

ஐபிஎல் தொடர்: முதல் வெற்றியை பதிவு செய்த தில்லி அணி

Updated: ஞாயிறு, 27 மார்ச் 2022 (20:11 IST)
இன்று நடைபெற்ற மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தில்லி அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.
 
இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்ததை அடுத்து மும்பை அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான இஷான் கிஷான் மிக அபாரமாக விளையாடி 81 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.  20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்தது மும்பை அணி.
 
கேப்டன் ரோகித் சர்மா 41 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் கலீல் அஹமது 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளனர்.
 
இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தில்லி அணி 32 ரன்கள் எடுத்த நிலையில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.ஆனாலும் பிருத்வி ஷா, 24 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து அணியை வெற்றியை நோக்கி எடுத்துச் சென்றார். இவருடன் ஷர்துல் தாகூர் 22 ரன்ளும் எடுத்திருந்தனர். பின்னர் வந்த  லலித் யாதவ் 48 ரன்களும், அக்சர் படேல் 38 ரன்களும் எடுத்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர். முடிவில்  6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து தில்லி அணி வெற்றியை ருசித்தது.

எல்லாம் காட்டு

அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் இஷான் கிஷான்.. இதற்கு முன் யார் யார்?

33 பந்துகளைச் சந்தித்து டக் அவுட்.. 10 வருடத்திற்கு பின் திரும்பிய வீரர் பரிதாப அவுட்..

பிரேமானந்த் ஆசிரமத்திற்கு ரூ.5 கோடியா? விராட் கோலி தரப்பு மறுப்பு!

ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

மீண்டும் ஐபிஎல் தொடரில் களம் குதித்த கங்குலி.. இனி நான் பார்வையாளன் இல்லை என பதிவு...

அடுத்த கட்டுரையில்
Show comments