Daily Horoscope
✕

எந்த சூழ்நிலையையும் புன்னகையுடன் எதிர்கொள்ள வேண்டும் –கெய்க்வாட்டுக்கு தோனி சொன்ன அட்வைஸ்!

Updated: வெள்ளி, 30 அக்டோபர் 2020 (10:55 IST)
சென்னை அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகியுள்ள ருத்துராஜ் கெய்க்வாட் தனக்கு தோனி வழங்கிய அறிவுரை குறித்து பேசியுள்ளார்.

சிஎஸ்கே அணி இளம் வீரர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டை அடுத்து அவர்களிடம் ஸ்பார்க் இல்லை என தோனி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்போது இளம் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் அடுத்தடுத்து இரண்டு அரைசதங்களை அடித்து தன்னை நிருபித்துள்ளார். நேற்றைய போட்டியில் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து அவர் பேசும் போது ‘எனக்கான வாய்ப்புகள் கிடைக்கும் போது அதை நான் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இரண்டு போட்டிகளிலும் கடுமையான சூழலில் இறங்கி விளையாடினேன். எந்த சூழ்நிலைமையாக இருந்தாலும் அதை புன்னகையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று எங்கள் கேப்டன் கூறுவார். அப்படி எதிர்கொள்வது கடினமே. ஆனாலும் அவ்வண்ணமே செய்ய முயற்சித்தேன்.’ எனக் கூறியுள்ளார்.

 

எல்லாம் காட்டு

ஜோஸ் பட்லருக்கு தொடையில் அறுவை சிகிச்சை.. 2027 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவாரா?

வெற்றி பெற 421 ரன்கள்.. அதிகபட்ச சேஸிங் ரன்களை எட்டுமா தென்னாப்பிரிக்கா...

டெல்லியில் இருந்து அகமதாபாத்துக்கு கிரிக்கெட் போட்டி மாற்றமா? பிசிசிஐ விளக்கம்...

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சதமடித்து அசத்தல்.. இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவாரா ஜடேஜா?

3-வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.. அபிஷேக் ஷர்மா அதிரடி அரைசதம்...

அடுத்த கட்டுரையில்
Show comments