ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2019
Written By
Last Modified: வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (08:13 IST)

ஜெய்ப்பூரிலும் எங்களோட தர்பார்தான்: ஹர்பஜன்சிங் டுவீட்

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து த்ரில் வெற்றி பெற்றது. தோனியின் ஆக்ரோஷமான ஆட்டம் இந்த போட்டியின் வெற்றிக்கு ஒரு காரணம்
 
இந்த நிலையில் ஒவ்வொரு போட்டிக்கு பின்னரும் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆவேசமாக கருத்துக்களை பதிவு செய்யும் சென்னை அணியின் முக்கிய சுழற்பந்துவீச்சாளரான ஹர்பஜன்சிங், நேற்று முடிந்த விறுவிறுப்பான போட்டிக்கு பின்னரும் ஒரு அட்டகாசமான பதிவை போட்டுள்ளார். அதிலும் ரஜினி பட டைட்டிலான 'தர்பார்'ஐ அவர் தனது டுவிட்டில் இணைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பதிவு செய்த டுவீட் இதுதான்:
 
நாங்க வந்தது வேணும்னா ஜெய்பூரா இருக்கலாம், ஆனா அங்கேயும் எங்களோட தர்பார் தான். ஏற்றிவிட்ட ஏணிய நாங்க மறந்ததுமில்ல, சிஎஸ்கே தூள் கிளப்பாத இடமுமில்ல. களத்துல மட்டும் தான் நாங்க மொறப்போம், நண்பா கொஞ்சம் வெளியில வந்துப்பாருங்க வெல்லந்தியா சிரிப்போம் என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது