Daily Horoscope
✕

இறுதிப்போட்டிக்குள் நுழையுமா சென்னை அணி? ஐதராபாத்துடன் இன்று மோதல்

Updated: செவ்வாய், 22 மே 2018 (11:30 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே-ஆப் சுற்று தகுதி போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன.
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐபிஎல் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இதில் முதல் நான்கு இடங்களை பிடித்த ஐதராபாத் (18 புள்ளி), சென்னை (18 புள்ளி), கொல்கத்தா(16 புள்ளி) மற்றும் ராஜஸ்தான் (14 புள்ளி) ஆகிய அணிகள்  பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.
 
இந்த நிலையில், இன்று 7.00 மணிக்கு வான்கடே மைதானாத்தில் நடைபெறவுள்ள பிளே-ஆப் சுற்று தகுதி போட்டியில் ஐதராபாத் மற்றும் சென்னை அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும். மேலும், தோல்வியடைந்த அணி நாளை நடைபெறும் பிளே-ஆப் சுற்று வெளியேற்றுதல் போட்டியில் வெற்றியடைந்த அணியுடன் மீண்டும் மோதும்.
 
இதுவரை சென்னை அணி 8 முறை பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறு 6 முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஐதராபாத் அணி 3 முறை பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறு 1 முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

மீண்டும் ஐபிஎல் தொடரில் களம் குதித்த கங்குலி.. இனி நான் பார்வையாளன் இல்லை என பதிவு...

வாஷிங்டன் சுந்தருக்கு தமிழக அரசு ரூ.75 லட்சம் பரிசுத்தொகை.. முதல்வர் விஜய் அறிவிப்பு..

352 ரன்கள் என்ற இலக்கை எட்டி சாதனை செய்த மே.இ.தீவுகள்.. தொடரை வென்றது இந்தியா...

மே.இ.தீவுகளுக்கு எதிரான 3வது போட்டி.. பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர் விலகல்.. மாற்று வீரர்கள் யார் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments