Daily Horoscope
✕

கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது: கோலி நம்பிக்கை

Updated: வியாழன், 5 ஏப்ரல் 2018 (13:32 IST)
பெங்களுர் அணியில்  பேட்டிங்கும், பவுலிங்கும் சிறப்பாக உள்ளதால்  எங்கள் அணி ஐபிஎல் தொடரில் கோப்பயை வெல்லும் என கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் திருவிழா என்று அழைக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 11-வது சீசன் வரும் 7-ம் தேதி தொடங்கி மே 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி கோலி தலைமையில் களமிறங்கவுள்ளது.
 
இந்த நிலையில் ஐபிஎல் தொடர் குறித்து பெங்களூர் கேப்டன் கோலி கூறியிருப்பதாவது:-
 
” ரசிகர்களைவிட கோப்பையை வெல்ல நான் ஆர்வமாக உள்ளேன். கடந்த 10 ஆண்டுகளாக பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறேன். நாங்கள் 3 முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தும் கோப்பையை வெல்லவில்லை. இந்த முறை  100 சதவீதம்  எனது பங்களிப்பை அளிப்பேன் என்றார்.
 
மேலும்,  இந்த முறை அணியில் பேட்டிங்கும், பவுலிங்கும் சிறப்பாக உள்ளதால்  எங்கள் அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது ” என்று  கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments