வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2017
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 15 மே 2017 (11:32 IST)

கொஞ்சம் கூட பொறுப்பில்லாத வீரர்கள்: சேவக் ஆவேசம்!!

புனே அணிக்கு எதிரான போட்டியின் தோல்விக்கு வெளிநாட்டு வீரர்களே காரணம் என சேவக் தெரிவித்துள்ளார்.


 
 
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், புனேவில் நடந்த 55 வது லீக் போட்டியில், பஞ்சாப் மற்றும் புனே அணிகள் மோதின. 
 
இப்போட்டியில் பஞ்சாப் அணி இதுவரை இல்லாத அளவு படுமோசமான தோல்வியை சந்தித்து. பஞ்சாப் அணி வீரர் ஒருவர் கூட 20 பந்துகளுக்கு மேல் எதிர்கொள்ளவில்லை. 
 
இதுகுறித்து அணியின் பயிற்சியாளர் சேவக் கூறுகையில், எனக்கு இது பெரிய ஏமாற்றம். வெளிநாட்டு வீரர் ஒருவர் கூட முதல் 15 ஓவர்கள் வரை நிலைக்கவில்லை. பொறுப்பில்லாத காரணத்தால் தான் தோல்வியை சந்திக்க நேர்ந்தது என்றார்.