வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2017
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 22 ஏப்ரல் 2017 (12:23 IST)

சிஎஸ்கே அணியின் 10 ஆண்டுகள்: ரசிகர்கள் கொண்டாட்டம்!!

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்கி 10 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த தொடரில் சென்னை அணிக்கு ரசிகர்கள் அதிகம்.


 
 
இதற்கு முக்கிய காரணம் சிஎஸ்கே அணிக்கு தோனி கேப்டனாக இருந்தது. சிஎஸ்கே தனது முதல் ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடியது.
 
டாஸ் வென்று சிஎஸ்கே 240 ரன்களை குவித்து தனது வருகையை கம்பீரமாக பறைசாற்றியது. 56 பந்துகளில் மைக்கேல் ஹஸ்சி 116 ரன்கள் குவித்தார். இப்போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வென்றது. 
 
சிஎஸ்கே அணி போட்டியிட்ட 8 போட்டிகளில், 5 போட்டிகளில் பைனல் வரை சென்றுள்ளது. அனைத்து போட்டிகளிலும் பிளேஆப் சுற்றை கடந்து சென்றுள்ளது. 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 
 
தற்போது 10 வது வருட கொண்டாட்டத்தின் போது, ரசிகர்கள் #10SuperYearsOfCSK என்ற ஹேஷ் டேக்-ஐ டிரண்ட் ஆக்கிவருகின்றனர்.