என்னது சாமந்திப் பூவில் மருத்துவக் குணங்கள் உள்ளதா...?
சாமந்திப் பூவின் இதழ்களை காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். அடிக்கடி சோர்வு ஏற்படாது. சாமந்திப் பூவை கசாயம் செய்து அதனுடன் பனை வெல்லம் கலந்து அருந்தினால் மலச்சிக்கல் தீரும்.
சாமந்தி பூ எளிதில் கிடைக்ககூடியது தான் அதில் நிறைந்துள்ள பல நன்மைகள் உள்ளது. சாமந்திப் பூவை நன்றாக காய வைத்து எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஒரு டம்ளர் வெந்நீர் சேர்த்து கலக்கினால் சாமந்திப் பூ தேநீர் தயார். இதை குடித்தால் உடலுக்கு தேவையான விட்டமின் சி சத்து அதிகமான அளவில் கிடைக்கும்.
உடலில் எத்தகைய பாதிப்பு ஏற்பட்டாலும் அதன் பாதிப்பு முதலில் தலைவலியாகத்தான் வெளிப்படும். இந்த தலைவலி நீங்க செவ்வந்திப் பூவின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தலைவலி நீங்கும்.
சாமந்திப் பூவின் இதழ்களை நீரில் கொதிக்கவைத்து அந்த நீரை சுளுக்கு வீக்கம் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் சுளுக்கு வீக்கம் விரைவில் குறையும்.
உடல் சூடானால் பல நோய்களுக்கு ஆளாக நேரிடலாம். இத்தகைய உடல் சூடு மாற செவ்வந்திப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் சூடு நீங்கும்.
கணையம் மற்றும் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. செரிமான மண்டலத்தில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்து செரிமானம் சீராக இருக்க உதவுகிறது.