வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

வெற்றிலையில் செய்யப்படும் சில இயற்கை வைத்திய முறைகள்...!

வெற்றிலைச் சாறுடன் சுண்ணாம்பு கலந்து தொண்டையில் தடவினால் தொண்டைக்கட்டு நீங்கும். இரண்டு அல்லது மூன்று வெற்றிலையை எடுத்து சாறு  பிழிந்து, அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து தினமும் அருந்தினால் நரம்புகள் பலப்படும்.
புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்குண்டு. தாம்பூலம் வாய்க்கு புத்துணர்ச்சி உண்டாக்கி, துர்நாற்றத்தை போக்கும்.
 
தாம்பத்தய உறவை மேம்படுத்தும். வெற்றிலையில் உள்ள நுண்கிருமிகளை அழிக்கும் சக்தியால் ஆஸ்துமா, காசநோய்கள் நீங்கும்.
 
வெற்றிலை இரத்த விருத்தியை அதிகரிக்கும். சுண்ணாம்பு 'கால்சியம்' ஆனதால் எலும்புகள் வலிமை பெறும். பாக்கு குடலில் பூச்சிகள் தாக்காமல் தடுக்கும்.  ஏலக்காய், பச்சைக்கற்பூரம், வால் மிளகு சேர்த்துக் கொண்டால் கபம் சேர்வதை குறைக்கும்.
 
வயிற்றுக் கோளாறு நீக்க, கோழை இளக, ஜீரண சக்தி அதிகரிக்க வெற்றிலை பயன்படுகிறது. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு  பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.
 
குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும்.
 
வெற்றிலை மற்றும் இஞ்சி ஆகியவற்றின் சாறு எப்பேர்ப்பட்ட நுரையீரல் நோய்களுக்கும் உடனடி நிவாரணமாக அமையும். நாள் பட்ட நுரையீரல் நோய்களுக்கும் தீர்வாகும். வெற்றிலையை உணவுக்குப் பின்பு உண்டால் செரிமானம் ஆகும்.
 
வெந்நீரில் வெற்றிலைகளை சேர்த்து கொதிக்க வைத்து தினமும் தண்ணீருக்குப் பதிலாக பருகி வந்தால் உடலில் பல்வேறு நோய்த்தொற்றுகளை தடுக்குமாம்.
 
மலச்சிக்கல், தலைவலி, சரும அரிப்பு, அழற்சி, நினைவிழப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கான மருந்து தயாரிப்பில் வெற்றிலைகள் சேர்க்கப்படுகிறது.
 
செரிமானத்தை தூண்டும். பற்கள் உறுதியடையும். தாம்பூலம் நோய்தடுப்பு மருந்தாகும்.