திங்கள், 7 அக்டோபர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Prasanth Karthick
Last Updated : ஞாயிறு, 16 ஜூலை 2023 (10:53 IST)

தெளிவான கண் பார்வை வேண்டுமா? இதையெல்லாம் மறக்காம செய்யுங்க!

Eyelashes
கண் பார்வை ஆரோக்கியம் என்பது எல்லாருக்கும் அவசியமான ஒன்று. கண்பார்வையை ஆரோக்கியமாக வைக்க சில எளிய வழிகளை இங்கே காணலாம்.

  • நல்ல கண் பார்வை பெற தினசரி 7 – 8 மணி நேரம் நன்றாக தூங்குவது அவசியம். இதனால் கண்கள் நல்ல ஓய்வை பெறுவது ஆரோக்கியமாக இருக்கும்.
  • மொபைல், கணினி உள்ளிட்ட டிஜிட்டல் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். நீண்ட நேரம் டிஜிட்டல் திரை வெளிச்சத்தை பார்ப்பது கண் விழித்திரைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
  • தினமும் இருவேளை உள்ளங்கைகளால் கண்களை மூடிக் கொண்டு சில நிமிடங்கள் பயிற்சி செய்ய வேண்டும்.
  • கண் பார்வையை மேம்படுத்தும் மீன், கேரட், பப்பாளி போன்ற உணவுகளை அவ்வபோது எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • கண்ணை கூசும் வெயில் வெளியே சென்றால் கூலிங் க்ளாஸ் போன்றவற்றை அணிந்து கொள்ள வேண்டும்.
  • இரவு நேரங்களில் முக்கியமாக நள்ளிரவு நேரங்களில் விழித்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
  • தினசரி இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இது உடல் சூட்டை குறைப்பதுடன், கண் நரம்புகள் சிறப்பாக செயல்பட உதவும்.