1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Cauveri Manickam (Abi)
Last Updated : ஞாயிறு, 17 செப்டம்பர் 2017 (18:22 IST)

சிம்புவின் இங்கிலீஷ் பட ஷூட்டிங் எப்போது?

சிம்புவின் இங்கிலீஷ் பட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்ற தகவல் கிடைத்துள்ளது.


 

 
‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம், சிம்பு ரசிகர்களையே கடுப்புக்கு உள்ளாக்கும் அளவுக்கு படுமொக்கையாக இருந்தது. எனவே, ஏகப்பட்ட பேர் சிம்புவையும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனையும் சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றினார். இதனால் கோபப்பட்ட சிம்பு, தானே ஒரு படத்தை இயக்கி நடிப்பதாக அறிவித்தார்.
 
எந்த மாநில மொழியிலும் இல்லாமல் ஆங்கிலத்தில் மட்டுமே உருவாகும் இந்தப் படத்தின் கதையை, கெளதம் மேனன் எழுதியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். மேற்கண்ட விவரங்களை மட்டும் ட்விட்டரில் அறிவித்த சிம்பு, அதன்பிறகு ட்விட்டரில் இருந்து விலகினார். இதனால், அந்தப் படத்தைப் பற்றிய தகவலே இல்லை.
 
இதற்கிடையில், மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. எனவே, சிம்பு இயக்கும் படம் என்னாச்சு என்று விசாரித்தால், அடுத்த மாத இறுதியில் ஷூட்டிங் தொடங்கலாம் என்கிறார்கள். டிசம்பர் இறுதிக்குள் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, ஜனவரி முதல் மணிரத்னத்தின் படத்தில் சிம்பு நடிப்பார் என்கிறார்கள்.