செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: வியாழன், 14 செப்டம்பர் 2017 (16:22 IST)

மணிரத்னம் படத்தில் சிம்பு நடிப்பதற்கு காரணம் குருபெயர்ச்சி - டி.ஆர் ஜோதிடம்

இயக்குனர் மணிரத்னம் படத்தில் நடிப்பதற்கு நடிகர் சிம்பு ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.


 

 
மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, பஹத் பாசில், சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளது.
 
இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர் “கடந்த செப்.2ம் தேதி குருபெயர்ச்சியன்று, சிம்பு என்னிடம் மணிரத்னம் தன்னை அழைப்பதாக கூறினார்.
 
ரஜினி, கமல் ஆகியோரை வைத்து படம் இயக்கியவர். எனது நண்பர் ஏ.ஆர். ரகுமானை சினிமாவில் அறிமுகம் செய்தவர். அப்படிப் பார்த்தால் அவர் குரு ஸ்தானத்தில் இருக்கிறார். எனவே, அவரை போய் பார்த்துவிட்டு வா எனக் கூறினேன். குருப்பெயர்ச்சிதான், சிம்புவையும், மணிரத்னத்தையும் இணைத்துள்ளது என டி.ஆர் கூறினார்.
 
நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், அரசியல்வாதி என பல முகம் கொண்ட டி.ராஜேந்தர் ஜோதிடமும் தெரிந்தவர் என்பது பலருக்கு தெரியாத ஒன்று.