ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2022 (12:02 IST)

அனிமேஷன் படத்துல அந்த மாதிரி சீனா? – தடை விதித்த சவுதி அரேபியா!

Lightyear
ஹாலிவுட் ஆக்‌ஷன் அனிமேஷன் படமான “லைட் இயர்” சவுதி அரேபியாவில் தடை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிவுட்டில் பிரபலமான அனிமேஷன் பட தயாரிப்பு நிறுவனமான டிஸ்னியுடன் இணைந்து பிக்சார் அனிமேஷன் நிறுவனம் தயாரித்து 1995ல் வெளியான படம் “டாய் ஸ்டோரி (Toy Story)”. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து டாய் ஸ்டோரியின் அடுத்தடுத்த பாகங்களும், அனிமேஷன் டிவி தொடர்களும் வெளியாகி பிரபலமாகின.

இந்த டாய் ஸ்டோரி படத்தில் பிரபலமான அனிமேஷன் கதாப்பாத்திரங்களில் ஒன்று “பஸ் லைட்இயர்” (Buzz Lightyear). இந்த கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு பிக்சார் நிறுவனம் தற்போது லைட்இயர் (Lightyear) என்ற படத்தை தயாரித்துள்ளது. விண்வெளி ஆக்‌ஷன் அட்வெஞ்சர் நிறைந்த இந்த படம் இந்த மாதத்தில் உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. இந்தியாவில் இந்த படம் ஜூன் 17ல் வெளியாகிறது.

இந்நிலையில் இந்த படத்தை சவுதி அரேபிய திரையரங்குகளில் வெளியிட அந்நாடு தடை விதித்துள்ளது. இந்த படத்தில் தன்பாலின முத்த காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், இது அரபு மத நம்பிக்கைகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் எதிராக உள்ளதால் படத்திற்கு தடை விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மார்வெல் நிறுவனத்தின் Doctor Strange and the Multiverse of Madness படமும் தன்பாலின காட்சிகள் உள்ளதாக அரபு நாடுகளில் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.