1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified செவ்வாய், 7 ஜூன் 2022 (15:40 IST)

நானும் RRRக்கு ரசிகன் ஆயிட்டேன்..! படத்தை புகழ்ந்த Doctor Strange எழுத்தாளர்!

Robert Cargill
பிரபல ஹாலிவுட் படமான டாக்டர் ஸ்ட்ரேஞ்சை எழுதிய எழுத்தாளர் இந்திய படமான ஆர்.ஆர்.ஆர் குறித்து புகழ்ந்துள்ளது வைரலாகியுள்ளது.

ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படம் உலகம் முழுவதும் பெரும் ஹிட் அடித்ததுடன் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் செய்து பெரும் சாதனையையும் படைத்தது.

இந்த படத்தை சமீபத்தில் பிரபல ஹாலிவுட் திரைப்பட எழுத்தாளரான ராபர்ட் கார்கில் பார்த்துள்ளார். ராபர்ட் கார்கில் ஹாலிவுட்டில் பிரபலமான சூப்பர்ஹீரோ படமான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மற்றும் அமானுஷ்ய படங்களான சினிஸ்டர் படங்களுக்கு எழுத்தாளராக பணியாற்றியவர்.

ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்த்த அவர் “இதுவரை நான் பார்த்த படங்களிலேயே மிகவும் வெறித்தனமான, நேர்மையான வித்தியாசமான ப்ளாக்பஸ்டர் திரைப்படம் RRR. நண்பர்கள் அழைப்பின் பேரில்தான் இந்த படத்தை பார்க்க சென்றேன். இப்போது நானும் இந்த படத்திற்கு மிகப்பெரிய ரசிகன் ஆகிவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.