வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By VM
Last Updated : வியாழன், 18 அக்டோபர் 2018 (11:00 IST)

காதலருடன் விரைவில் திருமணம்: அமெரிக்க பாப் பாடகி லேடி காகா அறிவிப்பு

அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி லேடி காகா விரைவில் தனது காதலன் கிரிஸ்டியன் கரினோவை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.
அண்மையில் நடந்த எல்ஸ் 25-வது ஹாலிவுட் நிகழ்ச்சியில்  அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகியும் நடிகையுமான லேடி காகா பங்கேற்றார். அப்போது மேடையில் பேசிய அவர் 'காதலன் கிரிஸ்டியன் கரினோவிற்கு நன்றி கூறிக்கொள்கிறேன்' என்றார். இதையடுத்து, ரசிகர்களில் ஒருவர் காகாவின் கையில் அவர் அணிந்து இருக்கும் மோதிரத்தை பார்த்து 'நீங்கள் நிச்சயிக்கப்பட்டு விட்டீற்களா?' எனக் கேள்வி எழுப்பினார். 
 
அப்போது பதில் அளித்த அவர், தனக்கும் தன் காதலன் கிரிஸ்டியன் கரினோவுக்கும் தனக்கும் நிச்சயம் ஆகியிருப்பதாகவும், விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.