செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 11 அக்டோபர் 2018 (13:21 IST)

வைரமுத்துவை திருமணத்திற்கு ஏன் அழைத்தார்?

கவிஞர் வைரமுத்து பல வருடங்களுக்கு முன்பே தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறும் சின்மயி, அவரின் திருமணத்திற்கு வைரமுத்துவை ஏன் அழைத்தார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

 
13 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பாடல் நிகழ்ச்சிக்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்த போது, கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அவரது தாயாரும் அதை உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கு வைரமுத்து மற்றும் சுவிட்சர்லாந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சுரேஷ் இருவரும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
 
அதேசமயம், சில வருடங்களுக்கு முன்பு சின்மயிக்கு திருமணம் நடந்த போது, வைரமுத்துக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். வைரமுத்துவும் கலந்து கொண்டு தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது, அவரின் அருகில் சின்மயியின் தாயும் இருக்கிறார். வைரமுத்துவின் காலில் விழுந்து சின்மயி ஆசிர்வாதமும் பெறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளிகியுள்ளது.
 
எனவே, வைரமுத்து மீது புகார் கூறும் நீங்கள் ஏன் அவரை திருமணத்திற்கு அழைத்தீர்கள்? காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினீர்கள்? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள சின்மயி, என் திருமணத்திற்கு திரையுலகில் உள்ள அனைத்து முக்கிய நபர்களுக்கும் அழைப்பு விடுத்தேன். அதுபோலவே வைரமுத்துவிற்கும் அழைப்பு விடுத்தேன். இல்லையெனில் ஏன் அழைக்கவில்லை என்கிற கேள்வி எழுந்திருக்கும். அதேபோல், திருமணத்தின் போது அனைவரின் காலிலும் விழுந்தேன். அப்படித்தான் அவரின் காலிலும் விழுந்தேன். இல்லையெனில், அதுவும் பிரச்சனையாகி இருக்கும் என விளக்கம் அளித்துள்ளார்.
 
ஆனால், அவரின் விளக்கத்தில் திருப்தி இல்லை என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.