இன்னும் எத்தனை உயிர் போக போகிறதோ? பைக்கில் சென்றவரை மாடு முட்டியதால் பஸ் சக்கரம் ஏறி பலி..!
சாலைகளை சுற்றித் தெரிவித்து மாடுகளால் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது.
அரசும் மாடுகளை சாலைகளில் சுற்றித் திரியவிட்டால் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் மற்றும் ஜெயில் தண்டனை என்ற அறிவிப்புகளையும் வெளியிட்டும் இன்னும் பல இடங்களில் மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன.
இந்த நிலையில் நெல்லையில் இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவரை திடீரென மாடு முட்டியதால் அவர் நிலைகுலர்ந்து கீழே விழுந்தார். அப்போது எதிரே வந்த பேருந்து அவர் மீது மோதியதால் சம்பவ இடத்திலேயே அந்த நபர் பலியான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லையை சேர்ந்த வேலாயுதராஜ் என்பவர் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த நிலையில் நேற்று பணி முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது வாகனத்தின் மீது மாடு முட்டியதை அடுத்து அவர் நிலை குலைந்து கீழே விழுந்தார்.
அப்போது எதிரே வந்த அரசு பேருந்து அவர் மீது மோதியதால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். பைக்கில் சென்ற நபரை முட்டிவிட்டு மாடு சர்வ சாதாரணமாக சென்ற காட்சியை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Edited by Siva