திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 17 ஏப்ரல் 2021 (12:46 IST)

நண்பர் மரண சேதியை கேட்டு அதிர்ந்து போய்விட்டேன் - நடிகர் விக்ரம்!

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்தார் என்றும் உடனடியாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் கடந்த 15 அம் தேதி கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.  
 
இதனிடையே அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் நேற்று செய்தி வெளியிட்டன. இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.  இவரது மரணத்திற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 
அந்த வகையில் நடிகர் விவேக், "என் மேல் அளவற்ற அன்பு கொண்டவரும், எனது நெருங்கிய நண்பருமான மாபெரும் கலைஞன்  விவேக்கின் மரண செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.தனிப்பட்ட முறையில் எனக்கும், தமிழ் திரைப்பட உலகிற்கும் மாபெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்." என்று தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.