Daily Horoscope
✕

அவதார் 2 முன்பதிவு தொடக்கம்! டிக்கெட் விலை இவ்வளவா? முதல் ஷோ எப்போது?

Written By Prasanth Karthick
Updated: புதன், 23 நவம்பர் 2022 (10:41 IST)
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகவுள்ள அவதார் இரண்டாம் பாகத்திற்கான முன்பதிவுகள் இன்று முதல் தொடங்குகின்றது.

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ல் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரும் வசூலை அள்ளி குவித்த படம் ‘அவதார்’. இன்று வரை உலக அளவில் அதிகம் வசூல் செய்த ஹாலிவுட் படம் என்ற பெருமையும் அவதார் வசம் உள்ளது. இந்நிலையில் 12 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.

அவதார் தி வே ஆப் வாட்டர் என்ற இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் டிசம்பர் 16ல் வெளியாக உள்ள நிலையில் படத்திற்காக பலரும் ஆவலாக காத்துள்ளனர்.

ALSO READ: வாரிசு ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் தாக்குதலா? கிளம்பிய சர்ச்சை!

இந்நிலையில் தற்போது அவதார் தி வே ஆப் வாட்டர் படத்திற்கு இந்தியாவில் உள்ள ஐமேக்ஸ் மற்றும் இன்ன பிற திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. அதிகபட்சமாக பெங்களூரில் ஐமேக்ஸ் திரையரங்கில் ஒரு டிக்கெட் ரூ.1450 க்கு விற்பனையாகிறது.

4டிஎக்ஸ் திரையரங்குகளில் குறைந்த பட்சமாக ரூ.450க்கு தொடங்கி ரூ.750 வரை டிக்கெட்டுகள் விற்பனையாகின்றன. டிசம்பர் 16ம் தேதி வெளியாகும் இந்த படத்தின் முதல் காட்சி அன்று நள்ளிரவு 12 மணிக்கே பல திரையரங்குகளில் தொடங்குகிறது.

Edited by Prasanth.K

எல்லாம் காட்டு

எம்.ஜி.ஆர் தலைப்பில் நடிக்கும் சூர்யா!.. அவர் காட்டுல மழைதான்!...

அரசன் கிளிம்ப்ஸ் வீடியோ!.. அப்செட்டில் சிம்பு ஃபேன்ஸ்.. அனிருத் நீடிப்பாரா?...

வழிதெரியாமல் கூட நான் அரசியலுக்கு வரமாட்டேன்": நடிகர் சூர்யா அழுத்தமான விளக்கம்!

அனிருத் திருமணம்!.. கிரீஸ் நாட்டுக்கு பறந்த ரஜினி, முக ஸ்டாலின்....

ராமாயணா 4 நாட்களில் ரூ.500 கோடியை நெருங்கி சாதனை.. இந்திய திரையுலகில் வசூல் சாதனை:

அடுத்த கட்டுரையில்
Show comments