வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 28 மார்ச் 2020 (12:59 IST)

கழுதைக் குட்டியை துரத்தி சென்ற அர்னால்டு: வீட்டுல போரடிச்சா இப்படிதான் போல!

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு கழுதை குட்டிகளை சைக்கிளில் துரத்தி சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா பீதியால் பல நாடுகளில் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா வேகமாக பரவி வருவதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்ஸுக்கு கொரோனா இருப்பது உறுதியானதை தொடர்ந்து பல ஹாலிவுட் நடிகர்கள் பயணங்களை தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் அர்னால்டு வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் அர்னால்ட் விஸ்கி என்ற கழுதை குட்டியையும், லூலூ என்ற குதிரை குட்டியையும் வளர்த்து வருகிறார். தினமும் காலை உடற்பயிற்சி செய்யும் அர்னால்ட், அந்த குட்டிகளோடு பொழுதை கழிப்பது வழக்கம். அவ்வாறாக காலையில் சைக்கிள் ஓட்டி உடற்பயிற்சி செய்த அர்னால்ட் இரண்டு குட்டிகளையும் துரத்தி செல்வதும், அவை ஓடுவதுமாக உள்ள அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

சில சமயங்களில் அர்னால்ட் செய்யும் விஷயங்கள் சில சிக்கலையும் ஏற்படுத்தி விடும். ஒருசமயம் பெண் ஒருவருக்கு அவர் பொது இடத்தில் முத்தமிட்டதற்காக மேயர் பதவியிலிருந்தே விலக வேண்டியிருந்தது. தற்போது இந்த வீடியோவை பார்த்த சிலர் அர்னால்ட் விலங்குகளை துன்புறுத்துகிறார் என ப்ளூகிராஸ் அமைப்பிடம் போட்டு வைத்து விட்டார்களாம்.