வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By vm
Last Modified: திங்கள், 18 மார்ச் 2019 (15:50 IST)

விஜய் சேதுபதியின் படத்தில் இணைந்த 2 ஹீரோக்கள்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் சமீபத்திய படங்கள் பல மிகப்பெரிய சாதனைகளை படைத்துள்ளது. இந்த ஆண்டு சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத், கடைசி விவசாயி மற்றும் மாமனிதன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளன.
தற்போது விஜய் சேதுபதி விஜய் சந்தர், எஸ்பி ஜனாதன், வெங்கட் கிருஷ்ணா ரோஹத் ஆகியோரது இயக்கத்தில்  படங்களில் நடித்து வருகிறார். இது இல்லாமல்  தெலுங்கில் சிரஞ்சீவியின் 'சை ரா ' மற்றும் மலையாளத்தில் மார்க்கோணி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் விஜய் சேதுபதி ஆரஞ்சு மிட்டாய் என்ற படத்துக்கு திரைக்கதை மற்றும் வசனங்கள் எழுதி வருகிறார். இப்படத்தை தளபதி விஜய்யின் சித்தி மகன் விக்ராந்தின் சகோதரர் சஞ்சிவ் இயக்க உள்ளார். இப்படத்தில் நெருங்கிய நண்பர்களான  விக்ராந்த், விஷ்ணு விஷால் இணைந்து நடிக்கின்றனர்.
விஷ்ணு விஷால், விஜய் சேதுபதி உருவாக்கும் படத்தில் நடிப்பதை உறுதி செய்து விட்டார். விக்ராந்த் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கலாம்.
 
விக்ராந்த் தற்போது பக்ரீத் மற்றும் சுட்டுபிடிக்க உத்தரவு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விஷ்ணு விஷால், 'வெண்ணிலா கபடி குழு 2' , ஜகஜால கில்லாடி,  ஹாதி மேரா சாதி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.