வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (11:14 IST)

வாராஹி அம்மனுக்கு உகந்த நைவேத்திய பொருட்கள் என்ன...?

Varahi amman
ஆலயங்களில் உள்ள ஸ்ரீ வாராஹி தேவிக்கு சிவப்பு நிற ஆடைகளை அணிவிக்க காரியத் தடைகள் நீங்கும். வெள்ளைப் பட்டு அணிவிக்க வாக்கு வன்மை, கல்வியில் மேன்மை உண்டாகும். மஞ்சள் பட்டு அணிவிக்கக் குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடைபெறும்.


திருமணத்தடை நீங்கும்.பச்சைப் பட்டு அணிவிக்கச் செல்வப் பெருக்கு ஏற்படும். நீலவண்ணப் பட்டு அணிவிக்க எதிர்ப்புகளில்  வெற்றி கிட்டும். ஸ்ரீ வாராஹி உபாசகர்கள் விளக்கிற்கு பஞ்சு, தாமரைத் தண்டு, வாழைத்திரி பயன்படுத்தலாம்.அதிலும் தாமரைத்தண்டு திரி மிகச் சிறந்தது.

நைவேத்தியங்கள்: தோல் எடுக்காத மிளகு சேர்த்த உளுந்து வடை, வெண்ணை எடுக்காத தயிர்சாதம், மொச்சை ,சுண்டல்,சுக்கு அதிகம் சேர்த்த பானகம்,மிளகு சீரகம் கலந்து செய்த தோசை, நவதானிய வடை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம்,பச்சைகற்பூரம் கலந்த பால்,கருப்பு எள் உருண்டை , சர்க்கரை  வள்ளிக்கிழங்கு, தேன் படைக்கலாம்.மாதுளம்பழம் மிகச் சிறப்பு.

ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள பாடல்கள் யாவும் மிகுந்த மந்திர சக்தி உடையவை .சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்கத் தெரியாதவர்கள் ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள 32 பாடல்களையும் தினம் படித்து வரலாம். வராஹி சித்தி அர்ச்சனையில் உள்ள மந்த்ரங்களைக் கொண்டும் அர்ச்சிக்கலாம்.

வராஹி மந்திரம்:
க்லீம் வாராஹமுகி |ஹ்ரீம் சித்திஸ்வரூபிணி |
ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா||

பன்னிரு திருநாமங்கள்:
1. பஞ்சமி, 2. தண்டநாதா, 3. சங்கேதா, 4. சமயேச்வரி, 5. சமயசங்கேதா, 6. வாராஹி, 7. போத்ரிணி, 8. சிவா, 9. வார்த்தாளி, 10. மகாசேனா, 11. ஆக்ஞா சக்ரேச்வரி, 12. அரிக்னீ.