1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (10:57 IST)

காயத்ரி மந்திரத்தை ஜபிப்பதால் உண்டாகும் பலன்கள் !!

விஸ்வாமித்திரர் அருளிய காயத்ரி மந்திரத்தின் பெருமையால் பிறகு ஒவ்வொரு கடவுளருக்கும் தனித்தனியே காயத்ரி மந்திரம் உருவாகத் தொடங்கியன . காயத்ரி மந்திரங்களின் தாய் என்பதால் முதலில் அதை ஜபித்த பின்பே பிற மந்திரங்கள் ஜபிக்கப்படுக்கின்றன.


காயத்ரி மந்திரம் கவசமாக செயல்பட்டு எல்லாத் துன்பத்தில் இருந்தும் காக்கும் என்றுகூறப்படுகிறது. காயத்ரி ஜப தினத்தன்று இன்று காலையில் வழக்கமான பூஜைகளை முடித்து விட்டு, காயத்ரி மந்திரத்தை 1008 முறை ஜபிக்க வேண்டும். தினமும் காயத்ரி மந்திரங்கள் கூற முடியாதவர்கள் கூட இந்த நாளில் 1008 முறை காயத்ரி மந்திரத்தை ஜபித்தால் மற்றநாட்களில் செய்தால் கிடைக்கும் பலன்களும் இதற்கு கிடைக்கும்.

காயத்ரி மந்திரம்:

ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத் !

அந்தப் பரம ஜோதி சொரூபமான சத்தியத்தை நாம் தியானிக்கிறோம். பூ உலகம், மத்திய உலகம், மேல் உலகம் மூன்றுக்கும் சக்தி அது. அந்தப் பரம சக்தி நமது புத்தியை வெளிச்சப்படுத்தட்டும் என்பது காயத்ரி மந்திரத்தின் பொருள்.

24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும்.

காயத்ரி மந்திரத்தை ஜபித்தால் இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும். அதற்காக வேண்டும் என்றே பாவம் தெரிந்தே செய்து விட்டு காயத்ரி மந்திரம் ஜபித்தால் பலன் கிடைக்காது.

காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும், நண்பகலில் சாவித்ரிக்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.